தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் தயாராகிவரும் திரைப்படம் "மாஸ்டர்". இவ் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் ப்ரிட்டோ  தயாரிக்கின்றது.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ராக்ஸ்டார் அனிரூத்  இசையமைக்கும் இத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் இடம்பெற்றது. 

இவ் விழாவில், 

படக்குழுவினரும் பல பிரபலங்களும் பங்குபற்றியிருந்தனர்.   பல நடன நிகழ்ச்சிகளுடன்  சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் நடிகை சிம்ரன் சில பாடல்களுக்கு நடனமாடினார். அத்துடன் விஜய் சேதுபதிக்காக சாண்டி மாஸ்டர் மற்றும் அவரது குழுவினர் நடனம்  ஆடினர்.

 இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்க்காக  அவரது வெற்றிப்படங்களில் இருந்து சில  பாடல்களுக்கு குழந்தைகள் நடனம் ஆடி அசத்தினார். இதன் போது தளபதி விஜயை போலவே பல வேடங்களில் சிறுவர்கள் நடனம் ஆடி தளபதியை மகிழ்ச்சிப்படுத்தினர். 

இவ் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக   நடிக்கிறார் . அவர்களுடன் இணைந்து  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு , அர்ஜுன் தாஸ் , அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன் ,  கௌரி கிஷன் , பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  "மாஸ்டர்" படத்தின் இசை வெளியீட்டு விழா! படத்தொகுப்பு