ஒவ்வொரு வருடமும் வத்திக்கான் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். 

ஆனால் இம்முறை கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக, பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்குமாறு உலக அளவில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

எனவே, இவ்வாண்டு ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு பக்தர்களை நேரில் வரவழைக்காமல் கொண்டாட வத்திக்ககான் நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

இதனை நேற்று அதிகாரபூர்வமாக அவ்வரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது. 

மேலும், ஏப்ரல் 12 ஆம் திகதி வரை, பாப்பரசரின் பொது சந்திப்புகளை வத்திக்கானின் அதிகாரபூர்வ செய்தி இணையதளத்தின் நேரடி ஒளிபரப்பில் மாத்திரமே காணமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமையும் முக்கிய விடயமாகும்.