உலக சுகாதார அமைப்பு மற்றும் பொது சுகாதார நிறுவனங்களின் கண்காணிப்பின்படி சீனாவின் பிரதான நிலப் பகுதிகளுக்கு வெளியே தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது உயர்வடைந்து செல்வதாக சி.என்.என். செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது. 

அதன்படி சீனாவுக்கு வெளியே இதுவரை 71,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பதிவாகியுள்ளது.

இத்தலியில் தற்போது 21 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், ஈரானில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தென்கொரியாவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், ஸ்பெயிலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் அமெரிக்காவில் 3,400 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பெப்ரவரி 26 ஆம் திகதிக்கு பின்னர் உலகளாரிய நாடுகளில் கொரோனா தொற்றானது இவ்வாறு வெகுவாக அதிகரித்து செல்கின்றது.

கடந்த டிசம்பர் மாதம் சீனா தனது முதல் கொரோனா தொற்றை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் தெரிவித்திருந்தது. இந் நிலையில் தற்போது 144 நாடுகளைச் சேர்ந்த 152,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் வரை 5,720 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் (15.03.2020)

 • சீனா: 3,199
 • இத்தாலி: 1.441
 • ஈரான்: 608
 • தென்கொரியா: 72
 • ஸ்பெய்ன்: 136
 • பிரான்ஸ்: 91
 • ஜேர்மனி: 08
 • அமெரிக்கா: 41
 • சுவிட்சர்லாந்து: 10
 • பிரிட்டன்: 21
 • நெதர்லாந்து: 12
 • நோர்வே: 01
 • ஜப்பான்: 22
 • ஆஸ்திரியா: 01
 • கிறீஸ்: 01
 • அவுஸ்திரேலியா: 03
 • கனடா: 01
 • ஹொங்கொங்: 04
 • அயர்லாந்து: 01
 • எகிப்த்: 02
 • ஈராக்: 09
 • லெபனான்: 04
 • இந்தியா: 02 
 • தாய்லாந்து: 01
 • இந்தோனேஷியா: 03
 • சான் மரீனோ: 02
 • பிலிப்பைன்ஸ்: 02
 • பொலாந்து:  01
 • தாய்வான்: 01
 • ஆர்ஜன்டீனா:  04
 • அல்பானியா:  01
 • லக்ஷம்பேர்க்: 01
 • அல்ஜீரியா: 02
 • பனாமா:  01
 • மொராக்கோ:  01
 • பல்கேரியா: 01
 • கயானா: 01
 • உக்ரேன்: 01

மேலும் பல நாடுகள்

Photo Credit : CNN