(இரா. செல்வராஜா)

பொதுத்தேர்தலுக்கான  வேட்புமனுவோ, கட்டுப்பணமோ, தபால்  மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களோ நாளை ஏற்றுக் கொள்ளப்படமாடடாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

நாளை அரச, வங்கி வர்த்தக விடுமுறையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருப்பதால் இவ்வாறான நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தபால்  மூலமான வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கு நாளை இறுதி  தினம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும். விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி நாளை மறுதினம் காலை 8.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை  ஏற்றுக் கொள்ளப்படும்.