(ஆர்.யசி)

கொரோனா வைரஸ் தோற்று அச்சம் குறித்து மக்கள் மத்தியில் குழப்பநிலை நீடிக்கின்ற நிலையில் நாளை பொது விடுமுறை தினமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேவை ஏற்படின் அரச விடுமுறை நீடிக்கப்படலாம் என அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை திங்கட்கிழமை அரச மற்றும் வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் அங்கீகாரத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நிலமைகள் மோசமாக இருப்பின் தேவைக்கேற்ப  விடுமுறை நீடிக்கப்படலாம் என  அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.