கொரோனா வைரஸின் காரணமாக மெய்வல்லுனர் போட்டிகள் பல இரத்து செய்யப்பட்டிருப்பதாக மெய்வல்லுனர் விளையாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சமன் குமார இது தொடர்பாக தெரிவிக்கையில் ஒலிம்பிக் போட்டி தெரிவிற்கான போட்டி இரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த தெரிவு போட்டி ஏப்ரல் மாதம் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது. ஆசிய கனிஸ்ட மெய்வல்லுனர் விளையாட்டு தெரிவு போட்டி இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுடெல்லியில் ஏப்ரல் 10 ஆம் திகதி 13 ஆம் திகதி வரையில் நடைபெறவிருந்த இந்திய மெய்வல்லுனர் சம்மேளன வெற்றிக்கிண்ண போட்டியின் இலங்கை அணி கலந்துகொள்ளாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

- அரசாங்க தகவல் திணைக்களம்