ஐக்கிய இராஜ்ஜியம், நோர்வே மற்றும் பெல்ஜியத்திலிருந்து வரும் அனைத்து இலங்கைக்கான விமானங்கள் இன்று நள்ளிரவு முதல் நிறுத்தி வைக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த தடை உத்தரவானது நாளை முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ள சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை, இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.