bestweb

எச்சரிக்கை !! அடிக்கடி செல்பி எடுப்பவர்களா நீங்கள் ?

Published By: Raam

20 Jun, 2016 | 11:04 AM
image

ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் அறிமுகத்தின் பின்பு நின்னா செல்பி, நடந்தா செல்பி, சாப்பிட்டா செல்பி என ஒரே செல்பி மயமாகியுள்ளது. 

மிக அபாயமான இடங்களில் செல்பி எடுக்கும் ஆர்வமும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளதால் பலர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. 

செல்பி மோகம் எந்த வயதினரையும் விட்டு வைக்கவில்லை. அடிக்கடி செல்பி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் விழுந்து சீக்கிரமே முதியவர் தோற்றத்தை ஏற்படுத்தி விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

கையடக்கத்தொலைபேசியில் இருந்து வெளிப்படும் ஒளியானது சருமத்தில் உள்ள நுண்துளைகள் வழியாக அடிப்பகுதிக்குள் ஊடுருவுவதால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தி மெலனின் பிக்மென்ட் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. 

இதனால் முகத்தில் உள்ள செல்கள் பழுதடைந்து கரும்புள்ளிகளையும் கருந்திட்டுகளையும் ஏற்படுத்துவதோடு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கிறது.

கையடக்கத்தொலைபேசியில் இருந்து வெளிப்படும் மின்காந்த கதிர்வீச்சு, தோலில் உள்ள மரபணுக்களை (DNA) அழித்து விடுவதால் தோல் விரைவில் வயதான தோற்றம் பெற்றுவிடுமென சர்வதேச இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கையடக்கத்தொலைபேசியில் இருந்து வெளிப்படும் LED ஒளி, ஒக்சிஜன் எதிர்வினை புரிவதால் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றி வயதான தோற்றத்தை ஏற்படுத்துவதோடு, சருமப் புற்றுநோய் வருவதற்கான அபாயங்களும் உண்டாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56