செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் வழக்கு விசாரணைகள் கொரோனா வைரஸ் அவசர காலநிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 100 ஐ எட்டியுள்ள நிலையில், நீதியமைச்சர் நீதிமன்ற துறையில் அவசர காலநிலையை பிரகடனப் படுத்தியுள்ளார்.

அதற்கு அமைவாகவே தற்போது பெஞ்சமின் நெதன்யாகுவின் வழக்கு விசாரணைகள் மே மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நீதியமைச்சு இன்றைய தினம் அறிவித்துள்ளது.

மூன்று தனித்தனி ஊழல் வழக்குகளின் படி இலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கையை மீறியமைக்காவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந் நாட்டு சட்டமா அதிபர் ஜெனரல் அவிச்சாய் மண்டெல்பிட் கடந்த ஜனவரி மாத இறுதியில் ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : CNN