புத்தளம் தள வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் சிறுவர்களையும், முதியவர்களையும் அவசியமின்றி அழைத்து வரவேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், புத்தளம் வைத்தியசாலை நிர்வாகத்தால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட வருவோர் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களையும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும் அவசியமின்றி அழைத்து வர வேண்டாம் என கேட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புத்தளத்தில் உள்ள காசிமிய்யா அரபுக் கல்லூரி, இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, மன்பாவுஸ் சாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரி, முஹாஜிரீன் அரபுக் கல்லூரி உள்ளிட்ட மதரஸா மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM