வடக்கின் மாபெரும் போர் ;ஒருநாள் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 34 ஓட்டங்களால் வெற்றி

Published By: Digital Desk 4

15 Mar, 2020 | 01:31 PM
image

யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் போட்டி, சென்.ஜோன்ஸ் அணியின் வெற்றியுடன் முடிவடைந்ததையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 18 ஆவது வருட ஒருநாள் போட்டி நேற்று  14 ஆம் திகதி சனிக்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது,

நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 36.3 ஓவர்களில் 94 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் தனுஜன் 14, டினோசன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக, இயலரசன், நிதுசன் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

95 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலளித்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 25.1 ஓவர்களில் 61 ஓட்டங்களுக்குச் சகல விக்கெடக்ளையும் இழந்தது. ராஜ்கிளின்டன் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக ஏ.அபிசேக் 5 விக்கெட்களையும், டினோசன், விதுசன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக அபிசேக் தெரிவு செய்யப்பட்டார்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54
news-image

பரபரப்பான போட்டியில் டிபெண்டர்ஸ் அணியை வீழ்த்தி...

2026-08-11 19:15:25
news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40