கொரோனா வைரஸ் பரவுவதற்கான காரணம் குறித்து ஆராய சர்வதேச விசாரணைக்கு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்தார்.

இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கத்தோலிக்க ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையுடன் சக்திவாய்ந்த நாடுகளை விளையாட அனுமதிக்க முடியாது. இயற்கையை சோதித்தன் விளைவாகவே கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றது.

இந்த வைரஸ் பரவலின் பின்னால் இருந்தவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதன் பரவலுக்கு காரணமானவர்களை ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச சமூகமும் தண்டிக்க வேண்டும்.

இனிமேலும் இயற்கை வளங்களை பரிசோதிப்பதை தடைசெய்ய வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.