கொரோனா தொற்று குறித்து ஆலோசிப்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இன்று காணொளி மூலமாக இடம்பெறவுள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிப்பதற்காக காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். 

இந்த அழைப்பை இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகள் வரவேற்றிருந்தன.

இந் நிலையிலேயே இந்தியப் பிரதமர் மோடியில் அழைப்பை ஏற்று இந்த நாடுகளின்  தலைவர்கள் காணொளியில்  இன்று  மாலை ஆலோசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சார்க் நாடுகளின் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளது.