பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

பஸ் கட்டணம் தொடர்பான இறுதித்தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

போக்குவரத்து நெரிசல் காரணமாக வீணடிக்கப்படும் எரிபொருளின் செலவை பயணிகள் கட்டணத்திலிருந்து அறவிடுவது தொடர்பிலான வேண்டுகோளை, கெமுனு விஜேரத்ன விடுத்திருந்ததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.