பிரேசிலின் வடகிழக்கு துறைமுகமான ரெசிஃப்பில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் பயணித்த பயணியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

78 வயதான கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிரேசில் செய்திச் சேவைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறித்த கப்பலில் பயணித்த 609 பேரில் சிலரிடம் கொரோனா வைரஸ் தொன்று போன்ற அறிகுறிகன் தென்பட்டமையை அடுத்து இக் கப்பல் வியாழக்கிழமை காலை முமதல் ரெசிஃப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவ‍ேளை கப்பலில் பயணித்த பயணிகள் மற்றும் பணிக் குழுவினர் இன்று தனிமையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை சோதனைக்குட்படுத்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல், பஹாமாஸ் கொடியுடன், பிரேசில் துறைமுக நகரமான சால்வடாரில் இருந்து ரெசிஃப்பிலைச் சென்றடைந்துள்ளது.

பிரேசிலில் நேற்று சனிக்கிழமை வரை 121 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவளை கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், பிரேசில் மாநிலங்களான சாவ் பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகியன அனைத்து பாடசாலைகளையும் மூட உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : south morning china post