அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் மாணவன் அப்துர் ரகுமான் அய்மன் பதினான்கு வயதுக்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட குண்டெறிதல் போட்டியில் தேசிய சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில் பங்குபற்றிய குறித்த மாணவன் 2017 ம் ஆண்டு பதிவாகியிருந்த 13.55 மீற்றர் தூரத்தை முறியடித்து 15.03 மீற்றர் தூரம் வீசி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
புதிய சாதனையை நிலைநாட்டியுள்ள மாணவன் அய்மன் தெரிவிக்கையில்,
நான் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் ஒன்பதாம் தரத்தில் கல்விகற்று வருகின்றேன்.
நான் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும்போது எனது சகோதரி பாடசாலை ரீதியாக நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வார் அப்போது அவர் பயிற்சிகளில் ஈடுபடுவார் அதை நான் ஆர்வத்தோடு பார்ப்பேன் அப்போதுதான் நான் விளையாட்டில் ஆர்வம் கொண்டேன்.
மாவாட்ட ரீதியாக மற்றும் மாகாண ரீதியாக நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொள்ளும்போது எனக்கு தேசியத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. ஆனால் மாகாணத்தில் நான் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட போதுதான் நான் தேசிய போட்டியிலும் சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான பயிற்சிகளில் தினந்தோறும் ஈடுபட்டு வந்தேன்.
எனது நம்பிக்கை வீண்போகவில்லை என்பதினால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் அத்தோடு என்னை வாழ்த்துவதற்கும், பாராட்டுவதற்கும் எனது சொந்தங்கள், என்மீது அன்பும், ஆர்வமும் கொண்டவர்கள் என்னை வாழ்த்திச் செல்வதோடு பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிச் செல்கின்றனர். அதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளதோடு என் உள்ளத்துக்கு புத்துணர்ச்சியும் ஏற்படுகின்றது.
நான் கல்வித்துறையிலும், விளையாட்டுத்துறையிலும் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டவுள்ளேன். அத்தோடு நான் ஆர்வமாக மேற்கொண்டுள்ள குண்டெறிதல் போட்டியில் ஒலிம்பிக் போட்டி வரைக்கும் செல்ல வேண்டும் என்று ஆசை கொள்கின்றேன் அதற்காக நான் கல்வியோடு சேர்த்து எனது விளையாட்டுத்துறை பயிற்சியிலும் தொடராக ஈடுபடவுள்ளேன். நான் தேசியத்தில் சாதனை படைத்தது போன்று சர்வதேசத்திலும் சாதனைகள் படைக்க அவைவரினதும் பிரார்த்தனைகளை எதிர்பார்க்கின்றேன்.
நான் ஒரு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக வந்து என்போன்ற வீரர்கள் பலரை உருவாக்க வேண்டும் அவர்கள் தேசியத்திலும், சர்வதேசத்திலும் பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் எனது இலட்சியமாகவுள்ளது. என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM