திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு வரும் அனைத்து பயணிகளும் 14 நாட்களுக்கு தம்மை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்த வேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலிய முழுவதும் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கான எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பில் வெள்ளிக்கிழமை அமைச்சரவை கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

கடந்த வார ஆரம்பித்தில், மோரிசன் 500 க்கும் மேற்பட்ட மக்களின் அனைத்து கூட்டங்களையும் இரத்து செய்யுமாறு அறிவுறுத்தினார். இது இது ஃபார்முலா வன் அவுஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ் போன்ற பல விளையாட்டு நிகழ்வுகளையும் ஒத்திவைக்க வழிவகுத்தது.

நியூஸிலாந்து குடி மக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உட்பட நாட்டிற்கு வரு அனைத்து பயணிகளும் 14 நாட்கள் காட்டாய தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்று நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்த அர்டெர்சன் நேற்று அறிவித்திருந்தார். 

இந் நிலையில் அவரின் அறிவிப்புக்கு எதிரேலியாக அவுஸ்திரேலிய பிரதமர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை நிலவரப்படி 197 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : CNN