132 நாடுகளிலும் உள்ள அதிகாரிகள் உலகளாவிய ரீதியில் 142,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிக்கை செய்துள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் வுஹானில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று இப்போது அண்டார்டிகாவைத் தவிர ஒவ்வொரு கண்டத்தையும் அடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானோர் மற்றும் உயிரிழந்தோர் சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் ஏற்கனவே பதிவாகியிருந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் சீனாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளும் 10 ஆக பதிவாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கொரோனாவால் சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 80,844 ஆக காணப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் தொகையும் 3,199 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 66,911 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலருந்து வெளியேறியுள்ளதாகவும் சீன சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த சில நாட்களில் சீனாவின் கொரோனா தொற்று தொடர்பான நோயாளர்களின் எண்ணிக்கையானது கணிசமாக குறைவடைந்து செல்கின்ற நிலையில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நடுகளில் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை வலுவடைந்து செல்கின்றமையை அவதானிக்க முடிகிறது.

சீனாவுக்கு வெளியே ஏற்பட்ட உயிரிழப்புகள் (14.03.2020)

 • இத்தாலி: 1,268
 • ஈரான்: 514
 • தென் கொரியா: 72
 • ஸ்பெய்ன்: 120
 • பிரான்ஸ்: 79
 • ஜேர்மன்: 06
 • பிரிட்டன்: 41
 • சுவிட்சர்லாந்து: 06
 • நெதர்லாந்து: 10
 • பிரிட்டன்: 10
 • நோர்வே: 01
 • ஜப்பான்: 21
 • ஆஸ்திரியா: 01
 • அவுஸ்திரேலியா: 03
 • கனடா: 01
 • ஹொங்கொங்: 04
 • கிறீஸ்: 01
 • எகிப்து: 02
 • அயர்லாந்து: 01
 • இந்தியா: 02
 • லெபனான்: 04
 • தாய்லாந்து: 01
 • ஈராக்: 07
 • இந்தோனேஷியா: 03
 • சான் மரீனோ: 02
 • பிலிப்பைன்ஸ்: 02
 • பொலந்து: 01
 • வியட்நாம்: 01
 • ஆர்ஜன்டீனா: 02
 • பனாமா: 01
 • அல்ஜீரியா: 01
 • பல்கேரியா: 01
 • மொராக்கோ: 01
 • கயானா: 01
 • உக்ரேன்: 01

மேலும் பல நாடுகள்: 07

Photo Credit : CNN