உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் சினிமா உட்பட  முக்கிய அரசியல் பிரபலங்களையும் விட்டு வைக்ககவில்லை. 

அந்தவகையில், கனேடிய பிரதமரின் பாரியாரிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்து, சிகிச்சை பெற்று வருவதையடுத்து, ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் பாரியார் மரியா பெகோனா கோமெஸ் பெர்னான்டஸ் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, சுமார் 193 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவ்வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

மேலும், அந்நாட்டு சமத்துவ அமைச்சர் ஐரீன் மன்டெரோவுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் அவர் கணவருடன் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் மனைவி மரியா பெகோனா கோமெஸ் பெர்னான்டஸ் (45) கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.