பொதுமக்கள் கூட்டமாக சேரும் நிகழ்வுகளுக்கு நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இன்று 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த தடை நிலவுமென பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தடை விதிக்கப்பட்ட நாட்களில் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் அரச மற்றும் தனியார் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி இல்லையென பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலவுகின்ற நிலையில், தற்போது வரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பொலிஸ் ஊடகம் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.