அனைத்து ஆலயங்களிலும் ஆராதனைகள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சுறுத்தலையடுத்தே பேராயர் இவ்வாறு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அனைத்து தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் மற்றும் பிற ஆராதனைகள் முன்னெடுப்பதை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை தவிர்க்குமாறு பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் ஏனைய தினங்களில் இடம்பெறும் பிரார்த்தனைகள் மற்றும் ஆராதனைகளை  தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 10 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.