எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமையை விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமையை வர்த்தக, வங்கி மற்றும் பொதுவிடுமுறை தினமாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை அரச விடுமுறை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.