சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கிடையில் வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில், இக்கொரோனா வைரஸ் சில முக்கிய பிரபலங்களிற்கும் தொற்றியுள்ளது. அந்தவையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பாரியார் சோபியே கிரேகொய்ரே வும் இக்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இவருக்கும் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் கணவர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உருக்கமான அறிக்கையொன்றை டுவிட் மூலம் பகிர்ந்துள்ளார்.

அதாவது, தன்னிலை அறிந்து தன்னாக பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், தன்னைப் போன்று பாதிக்கப்பட்ட அனைவரை போலவும் தானும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் சேர்ந்து, அதனைக் கடந்து வெற்றி கொள்வோம் என குறிப்பிட்ட அவர், ”நான்  கண்டிப்பாக மீண்டு வருவேன் ”என நம்பிக்கையும் வெளியிட்டுள்ளார். இட் டுவிட்டர் பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.