இலங்கை அரசியல்வாதிகளில் பேஸ்புக்கில் 10 இலட்சம் லைக்ஸை பெற்ற முதலாது அரசில்வாதி என்ற பெருமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுள்ளார்.

இந்த இலக்கை கடந்த சனிக்கிழமை பெற்றுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்றைய தினமே பத்து இலட்சம் லைக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ 10 இலட்சம் லைக்களை பெறுவதற்கு 9 வருடங்கள் ஆகியுள்ளதோடு, மைத்திரிபால சிறிசேன 18 மாதங்களில் 10 இலட்ச லைக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.