கடற்படையினரால் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் வடக்கு கடற்பகுதியில் சுமார் 485 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 97 இலட்சம் எனவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.