வவுனியா புளியங்குளம் பழையவாடி சிவநாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் பங்குனி மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உலக நாட்டு மக்கள் அனைவரையும் பீதியில் ஆழ்த்தி வரும் கொரோனா என்ற கொடிய வைரஸினால் ஏற்படும் நோயை குணப்படுத்தவும், தொற்ற முடியாமல் தடுக்கவும் கூடிய ஆன்மீக ரீதியான வழிபாட்டோடு ஆலய மருந்தும் வழங்கப்பட இருக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிப்பு ஏற்படக்கூடியவர்களுக்கும் விசேட பூஜை ஆராதனைகள் நடத்தப்பட்டு இலவசமாக வழங்கப்படவுள்ளது. இறைபக்தியும் நம்பிக்கையும் உள்ள நாட்டிலுள்ள அனைத்து மத மக்களையும் அன்புடன் வரவேற்று அனைத்து உலக மக்களும் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பங்கேற்குமாறு ஆலய தரமகர்த்தா வேண்டி நிற்கின்றார் .