வவுனியாவில் தங்கியுள்ள சீனா பொறியியலாளர் மூவரை தனிமைப்படுத்துமாறு பொலிஸில் முறைப்பாடு

By Daya

14 Mar, 2020 | 02:04 PM
image

வவுனியாவில் தங்கியுள்ள சீனா பொறியியலாளர் மூவரை தனிமைப்படுத்துமாறு  சமூக ஆர்வலர்கள் சிலர்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. 

வவுனியா வைரவ புளியங்குளம் பகுதியில் சீன  பிரஜைகள் மூவர் வீடு ஒன்றில் தங்கியிருந்த தகவல் நேற்று இரவு சமூக ஆர்வலர்கள் சிலருக்கு பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மன்னார் வவுனியா பிரதான வீதி அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதற்காக வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மூன்று பொறியியல்துறை சார்ந்த சீன பிரஜைகள் தங்கியிருந்துள்ளனர். 

குறித்த நபர்களில் ஒருவர் பங்களாதேஷ் ஊடக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இலங்கை வந்துள்ளார். ஏனைய இருவரும் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னரே சீனாவிலிருந்து இலங்கைக்கு விமான நிலையத்தினூடாக வருகை தந்துள்ளனர். அவர்கள் கடந்த சில வாரங்களாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்து வந்துள்ளனர். 

எனினும் அவர்களுக்கு கொரோனா தொற்கு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களை வைத்திய பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தி வைத்திருக்குமாறும் அப்பகுதியிலிருந்து அவர்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு நேற்று இரவு சமூக ஆர்வலர்கள் சிலரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நேற்று இரவு 10மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார்  சீன பிரஜைகள் தங்கியுள்ள வீட்டின் பாதுகாப்பு ஊழியரிடம் விசாரணைகள் மேற்கொண்டதுடன் அவர்களை அங்கு தங்கவைக்க நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகளுடனும் மாவட்ட அரசாங்க அதிபருடனும் தொடர்பு கொண்டு அவர்கள் இலங்கைக்கு வருகை தந்த ஆவணங்கள், அறிக்கைகள் என்பனவற்றை பரிசோதனை மேற்கொண்டனர். 

அத்தோடு,  வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான ஆரம்ப பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right