டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டக் கிண்ணத்தை கலம்போ எவ்.சி. அணி வென்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.
புள்ளிகள் பட்டியலில் 17 புள்ளிகளுடன் முதலிடம்பிடித்த கலம்போ எவ்.சி. 2015ஆம் ஆண்டுக்கான டயலொக் சம்பியனாக முடிசூடிக்கொண்டது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய இந்த கால்பந்தாட்ட சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தொடர்ந்து 10ஆவது ஆண்டாக டயலொக் நிறுவனம் அனுசரணையை வழங்கி உள்ளது. நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கொழும்பு குதிரைத் திடல் மைதானத்தில்
நடைபெற்ற இறுதி போட்டிகளிலும் பரிசளிப்பு நிகழ்விலும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிரதியமைச்சர் ஏ.எச்.எம்.ஹரிஸ், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அனுரடி சில்வா மற்றும் டயலொக் நிறுவனத்தின் பிரத நிறைவேற்று அதிகாரி ஹான்ஸ் விஜேசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் சம்பியனான கலம்போ எவ்.சி. அணிக்கு வெற்றிக்கிண்ணமும் தங்கப்பதக்கமும் 7.5 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது. அதேவேளை இரண்டாமிடத்தை றினோன்பெற்றது. இதில் மூன்றாவது இடத்தை இராணுவ அணி வென்றது.
அதேவேளை தங்க சப்பாத்துவிருதை இலங்கை இராணுவ அணி வீரரான தனுஷ்க விஜேசிறி வென்றார். இத் தொடரில் 9 கோல்களைப் போட்டி வீரரான றினோன் அணியின் வீரர் எம்.சி.எம்.ரிஸ்னாவ் அதிகம் கோல்களைப் போட்ட வீரருக்கான விருதை வென்றார்.
சிறந்த கோல் காப்பாளராக கலம்போ எவ்.சி. அணியின் கோல்காப்பாளர் எம்.என்.எம். இம்ரான் தெரிவுசெய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM