(செ.தேன்மொழி)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி - வேனுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டுபேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த வேன் மீது அதே திசையில் பின்னால் வந்த லொறி மோதியுள்ளது. 

இதன்போது குறித்த வேனில் சாரதி உட்பட 9 பேர் பயணித்துள்ளதுடன் , விபத்தில் படுகாயமடைந்த நபர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இதனை தொடர்ந்து கஹதுட்டுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்திருந்த ஏனைய எட்டுப் பேரும் தொடர்ந்தும் சிகிச்சைப்  பெற்றுவருகின்றனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.