தமிழர் தாயகப்பிரதேசங்களில் அரசு தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்துவதை அனுமதிக்க முடியாது: சாள்ஸ் நிர்மலநாதன்

By Daya

14 Mar, 2020 | 12:53 PM
image

தமிழர் தாயகப் பிரதேசங்களில் அரசு தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது எனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று வைத்திய பரிசோதனைக்காக வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 213 பேர் 09 பஸ்களில் வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பம்பைமடு இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த வெளிநாட்டவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை(13)  மாலை 6.30 மணியளவில்  அழைத்துச் செல்லப்பட்டனர். 

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் 5 பஸ்களில் கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்கு 213 பேர் வவுனியா, பம்மைமடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த குறித்த நபர்களைப் பம்ப மடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தி எதிர் வரும் 14 நாட்களுக்குச் சிகிச்சை முன்னெடுக்கப்படவுள்ளதெனச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் . கொரோனா தொற்று சந்தேக நபர்களை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மையப்படுத்தி சோதனைக்கு உட்படுத்துவது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

இலங்கையில் எவ்வளவோ பிரதேசங்கள் இருக்கும் போது ஏன் இந்த அரசாங்கம் தமிழர் பிரதேசங்களைக் குறிவைக்கின்றனர்? இதற்கு அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் ஏன்  மௌனமாக இருக்கின்றனர்? 

அரசு இதனைக் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிகவும் அவசரமான கண்டனத்தை வெளியிடுகின்றேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு எதிரான பிரேரணை சர்வதேச சதி...

2022-10-06 16:16:39
news-image

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும்...

2022-10-06 16:17:45
news-image

ஐநா மனித உரிமை அமைப்பின் உறுப்புநாடுகள்...

2022-10-06 15:56:27
news-image

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

2022-10-06 15:49:09
news-image

சாய்ந்தமருது கடற்பரப்பில் இயந்திரத்துடன் படகு மீட்பு

2022-10-06 13:33:37
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு நிபந்தனைகளை...

2022-10-06 13:31:12
news-image

லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி...

2022-10-06 12:50:07
news-image

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித்...

2022-10-06 12:48:22
news-image

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர்...

2022-10-06 12:14:12
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கையுடன்...

2022-10-06 11:59:25
news-image

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான...

2022-10-06 11:47:48
news-image

ஜெனீவா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும்- நாடு...

2022-10-06 11:09:34