சீனாவில் உள்ள ஒரு ஹோட்டல் இடிந்து விழுந்து 69 மணி நேரத்­துக்கு பிறகு, ஒருவர் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்ளார்.

சீனாவின் பீஜியான் மாகா­ணத்தின் குவான்ஸு நகரில் 5 மாடி­களைக் கொண்ட ஹோட்டல் ஒன்று கொரோனா கண்­கா­ணிப்பு முகா­மாக மாற்­றப்­பட்டு, கொரோனா பாதிப்பு இருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் நபர்கள் அதில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந்த ஹோட்டல் கடந்த 7ஆம் திகதி இரவு திடீ­ரென இடிந்து விழுந்­தது. அங்கு தங்­கி­யி­ருந்த 71 பேர் இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கிக்­கொண்­டனர்.

அதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்டு 38 பேர் உயி­ருடன் மீட்­கப்­பட்­டனர். அதன்­பின்னர் இடி­பா­டு­களில் சிக்கி மாய­மா­ன­வர்­களை மீட்கும் பணி இரவு பகல் பாராமல் தொடர்ந்­தது. எனினும் அவர்­களில் பலரை பிண­மா­கத்தான் மீட்க முடிந்­தது.

இந்த நிலையில் ஹோட்டல் இடிந்து விழுந்து 69 மணி நேரத்­துக்குப் பிறகு அதா­வது கிட்­டத்­தட்ட 3 நாட்­க­ளுக்கு பின்னர் இடி­பா­டு­க­ளி­லி­ருந்து ஒரு ஆண் உயி­ருடன் மீட்­கப்­பட்டார். உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்ட அவ­ருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கி­றது.

முன்­ன­தாக விபத்து நடந்து 52 மணி நேரத்­துக்குப் பிறகு கடந்த திங்­கட்­கி­ழமை நள்­ளி­ரவு 10 வயது சிறு­வனும் அவ­னது தாயும் உயி­ருடன் மீட்கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இதற்­கி­டையில் கட்­டிட இடி­பா­டு­களில் இருந்து நேற்று மேலும் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.