புத்தளத்திலிருந்து பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரை கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றராக அதிகரிக்கக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலநிலையின் காரணமாக மீனவர்களும் கடலை அண்டி வாழ்வோரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு  வானிலை ஆய்வாளர் சச்சின்தா ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.