மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையிலிருந்து இணை ஸ்தாபகரான பில்கேட்ஸ்  விலகியுள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பில் கேட்ஸ்,

“ நான் பணியாற்றும் மைக்ரோசொப்ட் மற்றும் பெர்க்ஷயர் ஹாத்வே ஆகிய இரண்டு பொது நிறுவனங்களிலிருந்தும் விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். உலகளாவிய சுகாதாரம், மேம்பாடு, கல்வி மற்றும் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் எனது ஈடுபாடு அதிகரித்து வருவதால் இவற்றிற்கு முன்னுரிமை வழங்கி அதிக நேரம் செலவழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தன் லிங்கடின் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகத்தையே கணினிமயமாக மாற்றியுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனத்தை, தனது  பாடசாலை கால நண்பர் பால் ஆலனுடன் இணைந்து 1975 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் தொடங்கினார். 2000 ஆம் ஆண்டு வரை மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். 

பில் கேட்ஸ் 2014 ஆம் ஆண்டு இந்தப் பதவிக்கு வந்த சத்ய நாடெள்ளாவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கு சேவையைத் தொடர்ந்தார்.

பில் கேட்ஸ் விலகல் குறித்து சத்ய நாடெள்ளா அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பணிப்பாளர் சபையிலிருந்து பில்கேட்ஸ் விலகியுள்ளார் என்றும்  சத்ய நாடெள்ளாவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக பில் கேட்ஸ் பங்களிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் அதிகமான நேரம் செலவிடுவதற்காக  பணிப்பாளர் சபையிலிருந்து விலகியதாகவும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ 

மேலும். சத்ய நாடெள்ளா பில் கேட்சுடன் இணைந்து பணியாற்றியது குறித்து மகிழ்ச்சியும் பெருமிதமும் வெளிப்படுத்தியுள்ளார் .