நீரிழிவு நோயாளர்கள் உட்கொள்ள வேண்டிய இனிப்புகள்

Published By: Daya

14 Mar, 2020 | 10:19 AM
image

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் பத்தாண்டுகளில் தெற்காசிய நாடுகளில் தான் உலகின் அதிகளவு நீரிழிவு நோயாளிகள் இருக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 

நீரிழிவு நோயாளிகள் வெள்ளைச் சீனியையும், வெள்ளைச் சீனியால் தயாரிக்கப்படும் இனிப்புகளையும் உட்கொள்ளகூடாது என்பார்கள். அவர்கள் வேறு எந்த வகையான இனிப்பை உட்கொள்ளலாம் என்று கேட்பதுண்டு. அதற்கு வைத்தியர்கள் தற்பொழுது சில இனிப்புகளை உட்கொள்ளலாம்  என பரிந்துரைக்கிறார்கள்.

நீரிழிவு நோயாளிகள் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக செயற்கை இனிப்பூட்டிகள் என்ற பெயரில் சந்தையில் கிடைக்கும் சில இனிப்புகளை தற்போது பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதனையும் தற்பொழுது தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டாம் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

இதனைத்தொடர்ந்து Stevia Rebaudiana என்ற மேலைத்தேய தாவர இனத்திலிருந்து தயாரிக்கப்படும் செயற்கை இனிப்பைச் உட்கொள்ளலாம் என பரிந்துரைக்கிறார்கள்.  சீனியை விட அதிக இனிப்பு சுவை கொண்டது என்றாலும், கலோரி ஆற்றலை தருவதில்லை என்பதாலும்,  இரத்தத்தில் சீனியின் அளவையும் அதிகரிப்பதில்லை என்பதாலும் இதனை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறார்கள். 

அதே சமயத்தில் நீரிழிவு நோயாளிகள் இது போன்ற செயற்கை இனிப்பிற்கு பதிலாக இயற்கையான இனிப்புச்சுவைக் கொண்ட தேனை பயன்படுத்தலாம். ஏனெனில் தேனில் அதிக இனிப்பு சுவை இருந்தாலும், அதன் கலோரி அளவு குறைவு என்பதும், இதில் குளுக்கோஸின் அளவு 30% என்றும், தேனின் உடலுக்கு ஆரோக்கியம் விளைவிக்கும் வேறுபல தாது உப்புகள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், என்சைம்கள் இருப்பதால் அதனை பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைக்கிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29