நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேலைகளில் சிறிதளவு மழை பெய்வதுடன் , நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் வரட்சியான வானிலை காணப்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பெய்யக் கூடிய சிறிதளவான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.