இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கை பெண் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக மிலானிலுள்ள இலங்கை துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

ஹொரணையை  சேர்ந்த 46 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பெண் வைத்தியசாலையில் இருந்து இத்தாலியின் பிரெசியாவில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பியுள்ளார்.

கடந்த மார்ச் 4 ஆம்  திகதி  குறித்த பெண் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்குள்ளானதாக  பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டு பிரெசியாவில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.