கொரோனா வைரஸ் பரவில் காரணமாக ஒரு மாத காலத்திற்கும் மேலாக சீனாவில் மூடப்பட்ட தனது 42 பிரபல வர்த்தக நிலையங்களையும் ஆப்பிள் நிறுவனம் இன்று மீண்டும் திறக்கவுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனாவில் உள தனது 42 பிரபல வர்த்தக நிலையங்களை பெப்ரவரி மாத தொடக்கத்தில் மூடுவதாக அறிவித்தது. 

இதனால் பெப்ரவரி மாதத்தில் இந் நிறுவனம் சீனாவில் அரை மில்லியனுக்கும் குறைவான கைத் தொலைபேசிகளை மாத்திரம் விற்பனை செய்ததாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியது.

இந் நிலையில் தற்போது கடந்த சில நாட்க்களாக புதிய கொரோனா நோயாளர்கள் குறைந்த அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளமையினாலும், சீனாவை விட்டு கொரோனாவின் பாதிப்பு தணிந்துள்ளமையினையும் கருத்திற் கொண்டே ஆப்பிள் நிறுவனம் தனது பிரபல வர்த்தக நிலையங்களை மீண்டும் திறக்கவுள்ளது.

இதேவளை இத்தாலியில் வலுவடைந்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியல் உள்ள தனது 17 வர்த்தக நிலையங்களையும் இந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் மூடியுள்ளமை குறிப்பிடத்தககது.

Photo Credit : theverge