உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - கைதான 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Daya

13 Mar, 2020 | 04:09 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில்  12 பேருக்கு இம் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு  கல்முனை நீதிமன்ற  நீதிவான்  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு  சந்தர்ப்பங்களில் வெள்ளிக்கிழமை (13) எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்படி  விசாரணைக்காக வந்த சந்தேகநபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரக்கால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து கைதாகிப்  பல  மாதங்களிற்கு மேலான விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்தனர்.

கைதானோரில் இருவர் பாதுகாப்பு தரப்பினரின் முகாம் ஒன்றில்  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது . 

எனினும்  இவர்களின் தடுப்புக்காவல் நிறைவடைவதைச் சுட்டிக்காட்டிய போதிலும் சட்டமா அதிபரின் பணிப்புரை கிடைக்கப்பெறாமையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என மன்றில் ஆஜரான பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

 மேலும் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான பிணை கோரிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக் களத்தின் கவனத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை இன்று பொலிஸாரின் ஆட்சேபனை காரணமாக அனைத்து சந்தேகநபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுக் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேகநபர்கள் அனைவரும் காத்தான்குடி,  கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந் துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கடந்த சில வாரம் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் கைதாகி விளக்கமறியலில்  வைக்கப்பட்ட மேற் குறித்த இடங்களைச் சேர்ந்த  அனைவரும்  சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த பின்னர் மீண்டும் இன்று விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58