முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 4 சந்தேக நபர்கள் இன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெப்பர்சுவல் ஸ்டசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் இன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்தே அவர்கள் இன்று ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலேயே அவர்கள் இருவரும் நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.