வதந்தியை நம்ப வேண்டாம் ! நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை !

Published By: Daya

13 Mar, 2020 | 04:57 PM
image

( ஆர்.யசி )

நாட்டின் ஏற்றிபொருள் தட்டுப்பாடு நிலவவில்லை எனவும் மிகத் தாராளமாக எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதன் காரணத்தினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. 

நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிவதன் காரணத்தையும் மக்கள் மத்தியில் அனாவசிய அச்சம் ஏற்பட்டுள்ள காரணியையும் கருத்தில் கொண்டு  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரின் கையொப்பத்துடன் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது. 

இதில் குறிப்பிடப்பட்டுள்ளதானது, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஒன்று நிலவவில்லை. போதுமான அளவு எரிபொருள் சகல பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் காலத்தில் தட்டுப்பாடு நிலவாத வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் அனாவசிய அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. 

புரளிகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவதானம் செலுத்தி எவரேனும் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பமடைய செய்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58