கொரோனாவை எதிர்கொள்ள அரசாங்கத்திடமுள்ள திட்டம் என்ன ? -மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் ரணில்

Published By: Vishnu

13 Mar, 2020 | 03:28 PM
image

(நா.தனுஜா)

கொவிட் - 19 வைரஸ் நோய்த்தொற்று அச்சுறுத்தலை எதிர்கொள்ள அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது என்று நாட்டுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து ரணில் விக்ரமசிங்க வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

கொவிட் - 19 எனப்படுகின்ற கொரோனா வைரஸ் தொற்று உலகலாவிய ரீதியில் மிகமோசமாகப் பரவியிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது. அதேபோன்று இந்நிலைக்கு தாம் எவ்வாறு முகங்கொடுக்கிறோம் என்பது குறித்து அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் உள்ளடங்கலாகப் பெரும்பாலான நாடுகள் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்குத் தம்மிடம் போதியளவான சுகாதார வசதிகள் இல்லை என்று அறிவித்திருக்கின்றன. 

எனவே எமது நாடு இச்சவாலை எதிர்கொள்ள வேண்டுமெனின், அரச மற்றும் தனியார் சுகாதாரக் கட்டமைப்புக்கள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி முறையான திட்டமொன்றைத் தயாரித்துக்கொள்வது இன்றியமையாததாகும்.

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை அளித்தமையானது வரவேற்கத்தக்க நகர்வு என்றாலும் கூட, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன என்பது குறித்து நாட்டுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09