அமெரிக்க சிக்காகோ மாநிலத்தை சேர்ந்த நபரொருவர், பேஸ்புக் காணொளி புகைப்படக்கருவி முன்னிலையில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அந்தோனியோ பெர்கின்ஸ் (28 வயது) நபரே இவ்வாறு பேஸ்புக் இணையத்தளத்தில்ட தோன்றியவாறு தனது தலையிலும் கழுத்திலும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

சிக்காகோவில் பேஸ்புக் இணையத்தளப் புகைப்படக்கருவி முன்னிலையில் ஒருவர் தற்கொலை செய்து கொள்வது கடந்த 3 மாத காலத்துக்கும் குறைந்த காலப் பகுதியில் இது இரண்டாவது தடவையாகும். கடந்த மார்ச் மாதம் அடையாளம் கண்டறியப்படாத நபரொருவர் பேஸ்புக் இணையத்தளத்தில் தோன்றிய நிலையில் தன்னைத் தானே 16 தடவைகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.