கொரோன வைரஸ் தொற்று நோயை பரிசோதனைக்குட்படுத்தும் 1000 கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வைத்திய முகக்கவசங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் தற்போது படிப்டியாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து செல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இலங்கையில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே சீனா இலங்கைக்கு இவ்வாறு கொரோனா பரிசோதனை கருவிகள், முகக்கவசங்களை வழங்க முன்வந்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸின் பிறப்பிடமாக சீனாவின் ஹுபே மாகாணத்தின் வுஹான் நகரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.