(ஜெ.அனோஜன்)

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கையானது உலகளாவிய ரீதியில் நேற்றைய தினம் வரை  124,518 ஆக காணப்படுவதுடன், உயிரிழந்தவர்களின் தொகையும் 4,607 ஆக பதிவாகியுள்ளது.

சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 80,793 ஆக காணப்படுவதுடன் அங்கு உயரிரிழந்தவர்களின் தொகையும் 3,169 ஆக உள்ளது.

சீனாவில் நேற்றைய தினம் 15 பேர் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை 11 பேர் மாத்திரம் உயிரிழந்துள்ளனர்.

இது சீனாவின் கொரோனா வைரஸ் தொற்று தணிந்து வருவதை வெளிக்காட்டியுள்ளது.

சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய  62,793 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவுக்கு வெளியே பதிவான உயிரிழப்புகள் நேற்று வரை ( 12.03.2020):

 • இத்தாலி: 827
 • ஈரான்: 354
 • தென்கொரியா: 66
 • பிரான்ஸ்: 48
 • ஸ்பெய்ன்: 47
 • ஜேர்மன்: 03
 • அமெரிக்கா: 29
 • சுவிட்சர்லாந்து: 04
 • ஜப்பான்: 15
 • நெதர்லாந்து: 05
 • பிரிட்டன்: 06
 • ஹொங்கொங்: 03
 • அவுஸ்திரேலியா: 03
 • ஈராக்: 01
 • எகிப்து: 01
 • சான் மரீனோ: 02
 • லெபனான்: 01
 • தாய்லாந்து: 01
 • பிலிப்பைன்ஸ்: 01
 • தாய்லாந்து: 01
 • அயர்லாந்து: 01
 • இந்தோனேஷியா: 01
 • ஆர்ஜன்டீனா: 01
 • பனாமா: 01
 • பல்கேரியா: 01
 • மொரக்கோ: 01
 • வேறுபல நாடுகள்: 07