கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Published By: Vishnu

12 Mar, 2020 | 08:53 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் தற்போது இரு கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று காலை பரவிய வதந்திகளால் சில பாடசாலைகளில் பதற்ற நிலை ஏற்பட்டது. 

இதனால் பெற்றோர்  தமது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்ற சம்பவங்கள்,  பாடசாலைக்கு சென்று அதிபர் ஆசிரியர்களுடன் முரண்பட்ட சம்பவங்கள் கொழும்பு ஆனந்தா கல்லூரி, திக்வெல்லை மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதி பாடசாலைகளில் பதிவாகியுள்ளன. 

இத்தகைய வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந் நிலையிலேயே பாடசாலைகளில் பரவிய வதந்திகளால் பெற்றோர் மத்தியில் வீண் அச்சம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிவரை  விடுமுறை அறிவித்துள்ளது.

இன்று கொழும்பு ஆனந்தா கல்லூரி, கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது அங்கு சென்ற பெற்றோர்கள் தமது பிள்ளைகளை  வீட்டுக்கு அழைத்து செல்ல முயன்றதால் பதற்ற நிலை ஏற்பட்டது. 

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது  கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை பிரஜையான மத்தேகொடையைச் சேர்ந்த நபரின் பிள்ளைகள் இருவர் ஆனந்தா கல்லூரியில் கற்பதாகவும், அவர்களுக்கும் அத் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.

 எனினும் முதலில், குறித்த கொரோன நோயாளரின் மகன்மார் அங்கு கல்வி கற்கின்றனரா என ஆனந்தா கல்லூரியின் அதிபரிடம்  வினவியது. இதற்கு பதிலளித்த ஆனந்தா கல்லூரியின் அதிபர் இரு மகன்மார் அக் கல்லூரியில் கல்வி பயில்வதாக பரவிய  தகவல் பொய்யானது எனவும், ஒரு மகன் மட்டும் 12 ஆம் தரத்தில் கல்வி பயில்வதாக கூறினார்.

குறித்த 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் கடந்த செவ்வாயன்றே இறுதியாக வருகை தந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த பின்னனியிலேயே குறித்த மாணவனுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக கூறி, வதந்திகள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நோயாளியின் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல்களின் எவ்வித உண்மையும் கிடையாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க  குறிப்பிட்டுள்ளார். 

குறித்த நோயாளியின் குடும்பத்தினரால் பாரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் அதனால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

குடும்பத்தினருக்கு தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முதல் நோயாளியின்  மகன், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயில்வதால், அது சார்ந்து பரவிய வதந்திகளையடுத்தும் இன்று காலை  காலை தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  

அவர்கள் பாடசாலைக்கு சென்று விடயங்களை உரிய முறையில் அங்கிருந்த பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

எவ்வாறாயினும் ஆனந்தா கல்லூரியில்  கொரோனா வதந்திகளால் சில சம்பவங்கள் இடம்பெற்ற போதும் பாரிய பதற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அக் கல்லூரி அதிபர் கூறினார். 

எனினும் சில பெற்றோர் பிள்ளைகளை அச்சம் காரணமாக பாடசாலைக்கு அனுப்பாத சம்பவங்கள் பதிவானதாகவும், சிலர் மாணவர்களை மீள அழைத்துச் சென்றதாகவும் கூரிய அவர், விடயங்களை சுகாதார, கல்வி அமைச்சுக்களுக்கு அறிவித்ததாக சுட்டிக்காட்டினார்.

இதனிடையே  கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர் சுற்றுலா சென்று தங்கியிருந்த இடங்களில் ஒன்றான திக்வெல்லை சுற்றுலா விடுதி ஒன்றில் சேவையாற்றுவோரின் பிள்ளைகள் குறித்த பகுதி பாடசாலைகளில் கற்பதை மையப்படுத்தி திக்வெல்லையிலும், அதனை ஒத்த சம்பவங்கள் தம்புள்ளையிலும் பாதிவாகியிருந்த. 

இந் நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17