நடன இயக்குனராக பணியாற்றிய பிருந்தா ‘ஹே சினாமிகா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

நடன இயக்குனராகவும், கமலஹாசன் நடித்த‘ நம்மவர்’ என்ற படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாகவும் ரசிகர்களிடத்தில் அறிமுகமானவர் பிருந்தா. இவர் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் தயாராகும் திரைப்படத்திற்கு ‘ஹே சினாமிகா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. 

இந்தப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹையாத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மூத்த இயக்குனர் கே பாக்கியராஜ், முத்திரை பதிக்கும் இயக்குனர் மணிரத்னம், சுகாசினி மணிரத்னம், மூத்த நடிகையும், பிருந்தாவின் தோழியுமான குஷ்பு உள்ளிட்ட பலர் பங்குபற்றினர். முதல் காட்சியை குஷ்பூ கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடையும் என்று தயாரிப்பு தயாரிப்பில் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே‘ஹே சினாமிகா.’என்றால், மணிரத்னம் இயக்கிய ஓ கே கண்மணி என்ற படத்தில் பாடலாசிரியர் வைரமுத்து இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். காதலில் மகிழ்ச்சியை அளித்த பெண்ணைக் குறிக்கும் சொல்லான, இதனை இந்த படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள் என்பதும், இந்த காலத்திற்கு ஏற்ற முக்கோண காதல் கதை என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.