வடக்கின் தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவிப்பு வரை மூடுவதற்கு ஆளுநர் பணிப்பு

Published By: Digital Desk 4

12 Mar, 2020 | 06:01 PM
image

வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் பீ எஸ் எம் சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படகூடிய ஆபதில் இருந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் ஏப்ரல் 20ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பீ எஸ் எம் சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ் ஒழுங்கினை உள்ளூராட்சி சபைகள் (மாநகர சபை, நகரசபை, பிரதேச சபைகள்) உரிய முறையில் மேற்பார்வை செய்து அர்ப்பணிபுடன் இதனை நடை முறை படுத்தும்படியும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வடமாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்- என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க - ஈரான் மோதல் தீவிரம்:...

2026-07-13 06:12:55
news-image

விளக்கமறியல் உத்தரவுகளால் சிறைகளில் நெரிசல்; மாற்று...

2026-07-13 06:04:37
news-image

காலநிலை மாற்றத்தால் தித்வா புயல் போன்ற...

2026-07-13 05:57:04
news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31