கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் அங்கொடை தோற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வைத்திய பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் கொரோனாவினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் என்பதுடன் 2 ஆவது இலங்கையார் ஆவார்.

முன்னதாகவே சீனப் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

அத்துடன் 50 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  அவரது குடும்பத்தினரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சந்தேகத்தில் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 44 வயதுடைய ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்படடுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க உறுதிப்படுத்தினார்.

குறித்த நபர் முன்னதாகவே கொரோனவினால் பாதிக்கப்பட்ட மத்தேகொட பகுதியை சேர்ந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.