அனைத்து விமானப் பயணிகளுக்கான , அதாவது இந்தியாவிற்கு விமானம் மூலம் வருகை தரும் பயணிகள் மற்றும் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் செல்லும் பயணிகள் மேற்குறித்த விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளுடனான நடைமுறையை இந்திய அரசானது அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய கட்டுகப்பாடுளுடனான நடைமுறைகள் நாளை (13 ) ஜீ.எம்.டி நேரப்படி 12 மணியிலிருந்து நடைமுறைப்படுத்தபடவுள்ளது.

ராஜ தந்திர விசா , அலுவலக விசா, ஐ.நா சர்வதேச அமைப்புக்கள் விசா , தொழில் விசா, செயற்றிட்ட விசா தவிர்ந்த ஏனைய அனைத்து வழங்கப்பட்ட விசாக்களும் 15 ஏப்ரல் 2020 வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

ஒ.சி.ஐ எனும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கான அட்டையை பெற்றவர்களுக்கு வழங்கப்படும் விமான நிலையத்தில் பெறும் விசாவானது ஏப்ரல் 15, 2020 வரை நடைமுறைப்படுத்தப்படமாட்டாது.

தவிர்க்க முடியாத கட்டாய காரணங்களை கொண்ட வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு வருகைதர வேண்டி இருந்தால் அருகிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சீனா, இத்தாலி, ஈரான், கெரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியிலிருந்து வரும் இந்திய பயணிகள் உட்பட அனைத்து வெளிநாட்டு பிரஜைகளும் 14 நாட்களுக்கு தனிமைபடுத்தப்படுவார்கள்.

இந்திய பிரஜைகள் உட்பட அனைத்து வெளிநாட்டு பிரஜைகளும் அவசியமற்ற பிரயாணங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவ்வாறு வரும் பயணிகள் இந்திய வருகையின் போது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தபடுவார்கள்.

அனைத்து இந்திய பிரஜைகளும் அவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு கடுமையாக வலியுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு வெளிநாடு சென்று வரும் பயணிகள் 14 நாட்களுக்கு தனிமைபடுத்தப்படுவார்கள்.

தரை மார்க்கமாக இந்திய எல்லையை கடந்து செல்லும் பயணிகளுக்கு விசேட சோதனை சாவடிகள் மூலம் உரிய மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் நாட்டை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

இது தொடர்பில் இந்திய உள்துறை அமைச்சும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தும்.

இத்தாலியிலிருந்து வரக் கூடியவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக 14 நாட்கள் இந்திய வருகையின் போது தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.