புத்தளம் தம்பபண்ணி கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இனைந்து நேற்று (11) சந்தேகத்துக்கிடமான வீடொன்றை முற்றுகையிட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை 10 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடைய தில்லையடி, ரத்மல்யாய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இதேவேளை சந்தேக நபர் மற்றும் கேரளா கஞ்சாவையும் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.